Favstar gets even better if you sign in.
Here's why signing in is good for you.
பணம் அல்லது பிணம்.. இந்த இரண்டு அந்தஸ்துகளில் ஒன்றை எய்திய பின் தான் நான்கு பேர் நமக்காகக் காத்திருக்கிறார்கள்..
ஆசைப்படுவதற்கும் அலுத்துப்போனதற்கும் நடுவே அல்லல்படுகிறது வாழ்க்கை..
வாழ்க்கையில் முக்கியம் எதுவென்றால் வாழ்வது தான்.. முடிந்தால் சந்தோஷமாக வாழ்வது.. இன்னமும் முடிந்தால் கௌரவமாக வாழ்வது..
எவன் என்ன செய்தாலும் சுரனையற்று கேள்வி கேட்காமல் இருப்பதற்குப் பெயர் ஒருமைப்பாடா, இல்லை எருமைப்பாடா?
முகுந்த் நாகராஜனின் ஒரு கவிதை ('அகி' தொகுப்பிலிருந்து) @arattaigirl http://t.co/1aFPJm4E
நூறு முறை சிரிக்க வைப்பவனைக் காட்டிலும் ஒரு முறை அழுகை துடைப்பவனையே பெண்களுக்குப் பிடித்துப் போகிறது..
தினமும் எவளாவது ஒருத்தி "எங்கிருந்தாலும் வாழ்க" பாட வைத்து விடுகிறாள்.
"எல்லாப் புகழும் இறைவனுக்கே" என ஏ.ஆர்.ரஹ்மான் அடிக்கடி குறிப்பிடுவது இளையராஜாவைத் தானோ!
நல்ல வேலை கிடைக்கனும்னா ஒண்ணு நல்ல காலேஜ்ல படிக்கனும் இல்லன்னா நல்லா காலேஜ்ல படிக்கனும்.
படைப்பு தன் விமர்சனத்தைத் தானே எழுதிக் கொள்கிறது.. விமர்சகன் கருவி மட்டுமே.. கருவிகளின் துல்லியத்தில் தான் வித்தியாசம்..
இந்திய வரலாற்றின் மிகப்பெரும் ஊழலை நிகழ்த்தியிருப்பவன் ஒரு தமிழன் என்பதில் பெருமை கொள்ளுங்கள்!
Stats can't be shown as @writercsk has never signed in to Favstar.